Source Maalaimalar news below about IT Park inspection by Transport Minister, Collector and other officials.
**************************************************************************
திருவெறும்பூர் அருகே நவல்பட்டில் தொழில் நுட்ப பூங்கா (டைட்டல் பார்க்) அடிக்கல் நாட்டு விழா, திருவெறும்பூர் பேரூராட்சி புதிய அலுவலகம், மற்றும் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா வருகிற 22-ந்தேதி மாலை நடக்கிறது.
விழாவில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று காலை டைட்டல் பார்க் அமைய உள்ள இடத்தையும் புதிய தாலுக்கா, பேரூராட்சி அலுவலகத்தையும் அமைச்சர் நேரு, கலெக்டர் சவுண்டையா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதில் திருவெறும்பூர் கே.என்.சேகரன் எம்.எல்.ஏ., துணை மேயர் அன்பழகன், மேயர் சுஜாதா,திருவெறும்பூர் யூனியன் தலைவர் சாந்தகுமாரி சாலமன், துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பு, திருவெறும்பூர் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், துணை தலைவர் ஜெயலட்சுமி குமார், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, அப்துல்குத்தூஸ், சோமஅரங்கராசன், நவல்பட்டு சித்ரவேல், பட்டவெளி ராமராஜ், கூத்தை செல்வராஜ், நீலமேகம், எலந்தப்பட்டி ராமராஜ், சோழமாதேவி சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
***********************************************************************************
No comments:
Post a Comment