Labels

Sunday, November 21, 2010

IT park Inauguration on Dec 8,2010

திருச்சி நவல்பட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் நுட்ப பூங்காவை மு.க.ஸ்டாலின் திறக்கிறார்; 8-ந்தேதி பிரமாண்ட விழா

திருச்சி நவல்பட்டில் அண்ணாநகரில் 147.63 ஏக்கரில் ஐ.டி.பார்க் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 ஏக்கர் நிலப்பரப்பில் 60 ஆயிரம் சதுர அடியில் எல்காட் நிறுவனம் மூலம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.


இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் முதல் கட்டமாக அசிஸ்ட் ஐலிங் செவன்த்சென்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட உள்ளன. மேலும் இண்டகிரேட், சயின்டிபிக் ஒகேஸ் நிறுவனங்களும் செயல்பட உள்ளன.

தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 8-ந்தேதி மாலை நடக்கிறது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

மேலும் விழாவில் புதிய கட்டிடங்கள் அடிக்கல் நாட்டிப்பணிகளை தொடங்கி வைத்தும் திறந்து வைத்தும் பேசுகிறார்.

முன்னதாக தொழில்நுட்ப பூங்கா கட்டிட இறுதி கட்டபணிகளை அமைச்சர் பூங்கோதை பார்வையிட்டார். அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
திருச்சிக்கு துணை முதல்-அமைச்சர் வருகையை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், கலெக்டர் மகேசன் காசிராஜன், துணை மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் மற்றும் அதிகாரிகள் தி.மு.க.வினர் விழா வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Source: Maalaimalar