Labels

Tuesday, November 11, 2008

For real or just an echo ?

Click the image or goto link below for details.




Source:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081110214042&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=11/11/2008&dName=%A7%DAf%A3&Dist=-15

4 comments:

  1. I understand the ground leveling work started couple days before.It will be good if anyone can provide more details

    ReplyDelete
  2. When I visited the airport site couple of weeks back, Mosaic group was levelling atleast 60 acres of land with 80 feet road coming up. I also saw their plan which consists of school, park and small recreation center. The quoted rate was 600 rupees/sq ft which I thought was inflated, considering nothing much is around yet.

    ReplyDelete
  3. Hi.I like to share this from dinamalar about IT Park construction.

    http://district.dinamalar.com/districtnews_main.asp?ncat=Tiruchirapalli&ncat_ta=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF#104841

    ReplyDelete
  4. திருச்சி ஐ.டி., பார்க் ஆரம்பகட்ட பணிகள் துவக்கம் : இன்னும் ஒருமாதத்தில் கட்டிட பணி

    திருச்சி: ""திருச்சி அருகே நவல்பட்டில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஐ.டி., பார்க் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள், நீண்ட இடைவெளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கி நடந்து வருகிறது. இன்னும் ஒருமாதத்தில் இங்கு கட்டிட பணிகள் துவங்கும்,'' என்று எல்காட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    தமிழகத்தின் தொழில்வளத்தை பெருக்கும் பொருட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் ஐ.டி., பார்க் எனப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்கில் ஐ.டி., பார்க்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் ஐ.டி., பார்க்கின் முதல்கட்ட பணிகள் துவங்கி நடந்து வருகிறது. திருச்சியில் நவல்பட்டு என்ற இடத்தில் ஐ.டி., பார்க் அமைக்க இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தது. 147 ஏக்கர் நிலப்பரப்பில் ஐ.டி., பார்க் அமைக்கப்படும் என்று நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் இடம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஐ.டி., பார்க் வரும் என்று அறிவிக்கப்பட்டதால், அந்த பகுதியில் உள்ள காலி நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.


    இந்நிலையில், திருச்சியில் ஐ.டி., பார்க் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து, அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், ஐ.டி., பார்க் அமைப்பதற்கான பணிகள் துவங்கவில்லை. இதனால் ஐ.டி., பார்க் வருமா, வராதா என்ற சந்தேகம் அந்த பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டது. மக்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில், திருச்சியில் ஐ.டி., பார்க் அமைக்க அரசால் கையகப்படுத்தப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தி, சமன்படுத்தும் பணிகள் கடந்த 11ம் தேதி பூமிபூஜையுடன் துவங்கியது. தற்போது ஐ.டி., பார்க் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நவல்பட்டு சிலோன் காலனிக்கும், சர்ச்க்கும் இடையில் உள்ள 21 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தும் பணியும், சமப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த இடம் முடிந்தவுடன் மற்ற இடங்களிலும் சமன்படுத்தும் பணி தொடரவுள்ளது. ஐ.டி., அமையவுள்ள நிலத்தை சுத்தப்படுத்தி, சமன்படுத்தும் பணியை தமிழக அரசின் விவசாய இன்ஜினியரிங் துறையினர் செய்து வருகின்றனர். இந்த பணி இன்னும் 25 நாட்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் இன்னும் ஒருமாதத்தில் துவங்கும் என்று எல்காட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete